கல்லொன்று தடுத்து காரிகையின் சாபம் கொன்று
வில்லொன்று ஒடித்து வைதேகி காதல்கரம் வென்று - மீட்டும்
வில்லொன்று ஒடித்து வன்முனிவன் தவம் வென்று - தந்தை
சொல்லொன்று எடுத்து சுடுகொடுங்காடு சென்றானே கதிநமக்குு
ஒன்றே சொல்லாகும் ஓடிவல்லவன் உயிர்குடிக்கும் அம்பும்
ஒன்றே வாசமலர் கொண்ட மார்பில் தான்கொண்ட அன்பும்
ஒன்றே அவன் பெயர் ஒன்றே அது இராம இராம இராம
என்றே சொன்னால் எழுபிறப்பும் அன்றே அற்றதே
Sunday, October 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
@PArvati - Thanks! A Tamil Blog... that shounds like a nice idea! Thanks a lot really! :-) I guess I should oblige this request of one of my most loyal readers!
Post a Comment